திருச்சி விமான நிலையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி நிவேதா (வயது 19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 20 நாட்களாக தனியாக வசித்து வந்த நிலையில் கிருஷ்ணகுமார் கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. உடனே இதுகுறித்து அவரது மனைவி நிவேதா ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்கு பதிந்து மாயமான கிருஷ்ண குமாரை தேடி வருகிறார்.