திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சேவா சமிதி, ஆலயத்தில் 1008 தாமரை மலர்களை கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் நடந்தது. திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் வெங்கடாஜலபதி சேவா சமிதி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பெல் குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலயத்தில் நேற்று
சூக்த ஹோம் நடந்தது. இந்த ஹோமத்தில் ஏலக்காய் மற்றும் அனைத்து வகையான மூலிகைகள் கொண்டு 1008 வேத மந்திரங்கள் முள்ளங்கி 1008 தாமரை கொண்டு பசு நெய்யினால் ஹோமம் நடைபெற்றது.
முன்னதாக பெருமாள் தாயாருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கோயிலில் உள்பிரகாரம் வலம் வந்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தாயார் சன்னதியில் சக்கரம் பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு 108 பசு நெய் தீபம் பக்தர்களால் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.