Skip to content
Home » காரில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 ராவுடிகள் கைது…

காரில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 ராவுடிகள் கைது…

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டு கொள்ளை என பல்வேறு சம்பவங்களை குறைக்கும் வகையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில்  ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதி மற்றும்  பொன்னேரி பகுதியில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் இருந்து வந்த காரை மறித்து விசாரணை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையின் போது திடீரென   தப்பி ஓட முயற்சித்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காருடன் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் காட்டுமன்னார்குடி தாலுகா மடப்புரம் மேலத் தெருவைச் சேர்ந்த தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவருமான விஜய் (28), நெடுஞ்சேரி புத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு (25), வீரானந்தபுரம் புதுத் தெருவை சேர்ந்த மாதவன் (21), நெடுஞ்சேரி புத்தூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26), சோழபுரம் அய்யாநல்லூர் தோப்புத் தெருவை சேர்ந்த பிரபாகரன் (26), சோழபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிஷ் (25) என்பதும், அவர்கள் வந்த காரில் அரிவாள், கத்தி, இரும்பு ராடு, கயிறு உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தன. இது குறித்த விசாரணையில் காட்டுமன்னார்குடி தாலுகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தம் உள்ளவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட சென்று இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. இதில் பிரபு என்பவருக்கு மட்டும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை முயற்சி உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளதாகவும், ஐந்து இடங்களில் பிடிவாரண்டு உள்ளதாகவும் இதனால் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிகிறது. மற்ற 5 நபர்களுக்கும் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை முயற்சி, உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து 6 பேர் மீதும் போலிசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் கொள்ளை முயற்சியில் திருச்சி விமான நிலையம் நோக்கி

செல்வதாகவும், வழியில் செல்லும் இடத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதற்கு தயாராக சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் வந்த டவேரா கார் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குற்ற சம்பவம் நடக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,குற்ற செயலை தடுக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை காவலர்கள் உள்ளிட்டோரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *