புதுகை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், பொன்னமராவதி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்ட திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டைகளை , சட்டம் ,நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபி இன்று வழங்கினார். மேலும் கர்ப்பிணி
பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, துணை இயக்குநர் ராம்கணேஷ், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அலுவலர் ரவிசங்கர், பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.