தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணியின் 91வது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்தார். மேலும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திராவிடர் பொதுச்செயலாளர் அன்புராஜ், ஆசிரியர் வீரமணியின் மனைவி மோகனா அம்மையார் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.