சேலத்தில் டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகர செயலாளர் திருச்சிராப்பள்ளி 3 மண்டல தலைவர் மதிவாணன் முன்னிலையிலும்
நடைபெற்றது. இப்பேரணியானது மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக காட்டூர் பெரியார் சிலையை வந்தடைந்தது. இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் நீலமேகம் தர்மராஜ் மணிவேல் பாபு ராஜ்முஹம்மது விஜயகுமார் இளைஞர் அணி நிர்வாகிகள் மாநகர கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்