ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நான்கு வனசரகம் வனத்துறை கட்டப்பட்டுள்ளது. உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார் சோதனை சாவடியில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளும் மது பாட்டில்கள்,பிளாஸ்டிக் கேன் மற்றும் போதை வஸ்துக்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடைசெய்து உள்ளனர், மேலும் விடுமுறை நாட்களில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை செய்து
சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்,இதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குனர் பார்க்கவதேவ் உத்தரவின் பேரில் வனச்சரகர்,வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் ஒன்பதவது கொண்டை ஊசி வளைவில் இருந்து ஆழியார் சோதனை சாவடி வரை உள்ள பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றினர், மேலும் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கபட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.