திருச்சி, மாநகராட்சி 40 மற்றும் 39வார்டுகளை இணைக்கும் வகையில் திருவெறும்பூர் அருகே கவுருகரை வாய்காலில் திருச்சி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 1.31 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பாலத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டினார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40 மற்றும்
39 வது வார்டுகளை இணைக்கும் பகுதியா கவுறு வாய்க்கால் குறுக்கே 40வது வார்டுக்கு உட்பட்ட நியூ டவுன் முத்துநகரில் இருந்து 39 வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மண்டல தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர்கள் சிவகுமார், நீலமேகம் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.