திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சியும் – சுற்றுச்சூழல் எனும் தலைப்பில் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் உரையாற்றினார். இந்த உரையாடலில் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் , துணிப்பை எடுப்போம்” என்ற துணிப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த
திருவிழாவில் திருச்சி மாவட்ட நூலகர் அ.பொ. சிவகுமார், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் “தண்ணீர்” கே.சி. நீலமேகம், பூச்சி செல்வம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். வருகை புரிந்த அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.