கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள், சில்லறை வியாபாரிகள்,ஹோட்டல் உரிமையாளர்கள், பெட்டிக்கடை உரிமையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட உரிமையாளர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா,பான்,கூல்லிப் உள்ளிட்ட பொருட்களை விற்கக் கூடாது,மறைமுகமாக யாரேனும் விற்பனையில் ஈடுபட்டால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் உங்களது ரகசியங்கள் காக்கப்படும் என்று பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து வணிகர்கள் மத்தியில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் பேசுகையில் மாநிலத்தில் குட்கா, பான், கூலிப் பொருள் தடை செய்யப்பட்ட பொருளாக உள்ளது,தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்,இந்த குற்ற செயல் ஈடுபட்டால் உங்கள் கடையை மூடப்படும் இதனால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட பொருளான குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்றால் சமுதாய சீர்கேட ஆகும், தொடர்ந்து இது போன்ற செயல்களை ஈடுபட்டால் கடுமையான சட்டம் உள்ளிட்ட குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தார். கரூர் மாவட்டத்தில் போதை பொருள்கள் மற்றும் குட்கா,பான், கூல்லிப் இல்லாத மாவட்டமாக மாற்ற வணிகர்கள் நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தார்.