தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகளை விதித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர் ராஜராஜசோழன் காலகட்டத்தில் தஞ்சாவூரில் பெரியநாயகி உடனமர் பெருவுடையார் திருக்கோயில் காவிரிக்கரையில் கட்டப்பட்டது. பிரகதீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதிலிமிருந்து பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.