திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன் , துர்காதேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்பொழுது
மழைக்காலம் தற்பொழுது நடந்து வருவதால் மழை நீர் தேங்காமல் இருக்க திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வருங்காலத்திலும் மழை நீர் தேங்காமல் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், ஒத்துழைப்பு தர வேண்டும்.டெங்கு கொசு திருச்சி மாநகராட்சியில் எங்கும் கிடையாது. இதே நிலையை நாம் தொடர்ந்து சிறப்பாக பணி செய்ய வேண்டும்.
மழைநீர் தேங்கும் இடங்களில் மின் மோட்டார்கள் நல்ல முறையில் செயல்பட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வர வேண்டும் என்று பேசினார். சங்கர் (மார்க்சிஸ்ட் (கம்யூனிஸ்ட்) எனது வார்டில் நகர்புற வாழ்வு மையம் கொண்டு வர வேண்டும். மேலும் எனது வார்டில் குடிநீர் சரியாக வருவதில்லை. ஆகவே அந்தப் பகுதியில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ் (இ. கம்யூனிஸ்ட்) எனது வார்டு பகுதியில் போடாமல் இருக்கும் சாலையை விரைந்து அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் முறையாக அமைத்த பிறகு தார் சாலை அமைக்க வேண்டும்.சில நேரங்களில் குடிநீர் மஞ்சளாக வருகிறது. இதனை ஆய்வு செய்ய சரியான வழி இல்லாமல் இருக்கிறது. எனவே குடிநீர் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நம்முடைய மாநகராட்சி சார்பில் குடிநீர் ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேயர் அன்பழகன்: குடிநீர் தூய்மையாக இருக்கிறதா என்பதை கண்டறிய கம்பரசம்பேட்டையில் குடிநீர் தூய்மை ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக) எனது வார்டில் இரவு நேரத்தில் மாடுகள் தொல்லை அதிகமாக இருக்கிறது.இந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரன் (வி.சி.சி.) மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆதரவற்ற இல்லத்தில் தங்கி இருப்பவரிடம் அங்கு உள்ளவர்கள் பணம் வசூல் செய்வது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனது வார்டில் சுகாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநிலை பொறியாளர்கள் அலுவலகத்தில்
கணினிகள் நல்ல முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்பிகாபதி அதிமுக வயர்லெஸ் ரோட்டில் சாலை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே சமயத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு சாலைகள் எடுக்கப்படுகிறது என்று வதந்தி பரவுகிறது.
நாகராஜன் (திமுக) – ஆரம்ப சுகாதார நிலையங்களில்நெபுலைசர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயலூர் சாலையில் மழை நீர் வடிகால் சரியாக கட்டப்படாத காரணத்தால் சாக்கடை நீர் தேங்கி கொண்டு செல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது.அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் அன்பழகன் :- நெடுஞ்சாலை துறையினர் இந்த பணியை மேற்கொண்டதால் சரியாக செய்யவில்லை. இதனை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்
பன்னீர்செல்வம் (திமுக): சத்திரம் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களோடு வெளியூர் பஸ்கள் சத்திரம் பேருந்து நிலையத்தில் வேறு இடத்தில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேயர் அன்பழகன் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்அமைக்கப்பட்டால் விரைவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள வெளியூர் பஸ்கள் அனைத்தும் பஞ்சபூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சத்திரம் பேருந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் மட்டும் செயல்படும்,
பைஸ் அகமது (ம.ம.க.):எனது வார்டில் கோழிகழிவுகள்அதிகமாக கொட்டப்படுகிறது இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்னூர் உழவர் சந்தை பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ஏதேனும் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்நாதன் (அமமுக).எனது வார்டில் நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது, அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி மணி (திமுக) என் வார்டில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் நமது மாநகராட்சி இடத்தில் ஒரு நடைமேடை அமைத்தால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீடு இடிக்கும் கட்டிட பொருட்களையும் இந்த இடத்தில் கொட்டாமல் பாதுகாக்கவும் இங்கே மேல்நிலைப்பள்ளி இருப்பதால் இந்த இடம் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.கூட்டத்தில் தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் குறைகளை குறித்து பேசினார்கள். பிறகு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.