நியூயார்க்கில் இருந்து டில்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை டில்லி போலீசார் தெர்வித்து உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி சங்கர் மிஸ்ராவை போலீசார் தேடி வந்தனர். மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா, அமெரிக்காவைச் சேர்ந்த அவரது நிறுவனமான வெல்ஸ் பார்கோவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெல்ஸ் பார்கோ இந்தியாவின் துணைத் தலைவர் சங்கர் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘ஆழ்ந்த கவலையளிக்கிறது’ . இந்த நபர் வெல்ஸ் பார்கோவிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறி உள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்தார்.
