வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் பாடியநல்லூர் ஏரியில் நீர் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியே சென்றபோது செங்குன்றம் அடுத்த பாலவாயில் குமரன் நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் செங்குன்றம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். தொடர்ந்து
கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாதே இது போன்று குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இனிவரும் காலங்களில் ஆவது கால்வாயில் தூர்வாரி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.