மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணிமுதல் விடிய விடிய பெய்த மழையால் மயிலாடுதுறையில் 5.7 செ.மீ., மணல்மேடு 5.2 செ.மீ., சீர்காழி 6.84 செ.மீ.,கொள்ளிடம் 8.42 செ.மீ., தரங்கம்பாடி 6.04 செ.மீ., செம்பனார்கோவில் 3.04 செ.மீ., மாவட்டத்தில் சராசரியாக 5.87 செ.மீ., பதிவாகியுள்ளது. நள்ளிரவில் 3 மணி நேரம் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் நரமே இருளில் மூழ்கியிருந்தது. காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக உள்ளது மழைஇல்லை. மயிலாடுதுறை, குத்தாலம் பகுதியில் இந்தமழை விவசாயத்திற்கு ஏற்ற மழை என விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.