Skip to content
Home » காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

காரமடை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை தாக்க முயன்ற காட்டுயானைகள்..

நீலகிரி மாவட்டத்திற்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், கோத்தகிரி வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை தினங்களில் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் 3வது மாற்றுப்பாதையில் காரமடையில் இருந்து மன்சூருக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இச்சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்தில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு அரியவகை வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி வாகனங்களை வழிநடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இச்சாலையில் குட்டியுடன் கூடிய 5 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இதனிடையே இன்று காலை மஞ்சூரியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து யானைகள் முன்பு நடந்து சென்றதால் சத்தமாக ஹாரன் அடித்துள்ளார். அப்போது இதன் சத்தம் பிடிக்காமல் காட்டு யானை ஒன்று வேகமாக வந்து அரசு பேருந்தை தாக்க முயன்றது. இதையடுத்து லாவகமாக அரசு பேருந்து அங்கேயே பேரந்தை நிறுத்தி விட்டனர். பின்னர் யானை வனத்திற்குள் சென்ற பின்பு பேருந்தயை இயக்கி சென்றார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!