அரியலூர் மாவட்டம், அயனாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னுசாமி (65/15). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரியலூர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து, இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பா என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு, செந்துறை ரோடு அமீனாபாத் அருகே சென்றுபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி, இருவருக்கும் காயம் ஏற்பட்டு, பொன்னுசாமி அரியலூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக அரியலூர் காவல்துறையினர் கொலையாகாத மரண வழக்காக பதிவு செய்து, குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் சோழதாரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (38) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களையும் சமர்பித்ததின் அடிப்படையில், இவ்வழக்கின் எதிரி ஆனந்தவேலுக்கு அரியலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன் 28.11.2023 இன்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.