கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் காமராஜர் மார்க்கெட் வியாபாரிகளின் 20 அன்று ஆண்டு கோரிக்கையான புதிய வணிக வளாகம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதனை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நிருபர்களிடடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி…
கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். காமராஜர் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையான
வணிக வளாகம் கட்டும் பணியை நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே செயல்படுத்தி உள்ளோம். மீன் மார்க்கெட்டுக்கு தனியாக வணிக வளாகம் கட்டுவதற்காக 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு பணிகள் தயாராகி வருகின்றன. அந்தப் பணிகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டர் பதிவு குறித்த கேள்விக்கு, அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருப்பதால் அரசியல் குறித்து தற்போது பேச வேண்டாம் என்று இவ்வாறு பதில் அளித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.