திருச்சி, உறையூரை சேர்ந்தவர் மணி வயது 56. டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பரிமளா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.