இந்த பள்ளிவாசலில் கடந்த 22 ஆண்டுகளாக ’ஜெய்னி’ என்ற 58 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு முறையான ஆவணங்களை காண்பிக்குமாறு வனத்துறையினர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிர்வாகத்திடம் கேட்டனர். அப்போது ஆவணங்களை நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் யானையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 22 ஆண்டுகளாக மக்களுடன் பழகி வந்த யானைக்கு கடையநல்லூர் மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். பலரும் யானைத் தும்பிக்கையைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கதறியழுத காட்சி சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.