சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே ரசிகர்களிடம் தனித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நட்சத்திர பட்டாளம் படத்தில் இணைந்ததால், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இதனால் படத்தின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.