திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நித்திஷ் குமார்(19).இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து கல்லூரிக்கு கல்லூரிக்கு சொந்தமான வேனில் சென்று வருகிறார்.
வேனில் அவருடன் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலை (21) என்பவரும் பயணித்தார். மாணவர்கள் இருவரும் சில நாட்களாக வேனில் பேசி கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலை இன்று கல்லூரிக்கு வேனில் சென்றபோது நித்தீஷ் குமாரிடம் கேட்டுள்ளார்.
இதற்கு நித்தீஷ்குமார் பதில் அளிக்காமல் இருக்கவே அப்போது தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால்
அண்ணாமலை, நித்திஷ்குமார் கழுத்தை அறுத்தார். மாணவன் நிதிஷ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வேனில் பயணித்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிடவே வேன் டிரைவர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வேனை திருப்பி சென்று மாணவன் நித்திஷ்குமாரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிதிஷ்குமாருக்கு 12 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் எம் பி ஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலையை குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.