பெரம்பலூர் அருகே எளம்பலூரில் பிரம்மரிஷி மலை உள்ளது. பிரம்மரிஷம் இடையில் வருடம் தோறும் கார்த்திகை தீபத்தன்று கார்த்திகை தீபம் விமர்சையாக ஏற்றுக்கொள்ளும் அதன்படி 41 ஆம் ஆண்டு கார்த்திகை தீப திருவிழா பிரம்மரிஷி மலையில் பிரம்மரிஷி மலை சித்தர்கள் சார்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பிரம்மரிஷி மலையில் 5 அடி செப்பு கொப்பரை கொண்டு 2,100 மீட்டர் 3 ஆயிரத்து எட்டு லிட்டர் எண்ணெய் நெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு அரோகரா கோசத்துடன், பூதகண வாத்தியங்கள் முழங்க,சித்தர்கள் யாகத்துடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரம்மரிஷி மலையில் வான வேடிக்கை நடைபெற்றது. பிரம்மரிஷி மலையின் அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பிரம்மரிஷி மலை கார்த்திகை தீபத்தில் சுற்றுவட்டர கிராமத்தில் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பிரம்மரிஷி மலை மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பாக தவயோகி தவசிநாதன் சுவாமிகள் ஏற்பாடு செய்திருந்தார்.