திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர விழாவான மகா தீபத்திருவிழா இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து இன்று மாலை சரியாக 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்.
Tags:thiruvanamallai