17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள டோனி தலைமையிலான சிஎஸ்கே விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று பிற்பகல் வெளியிட்டது. ஜேமீசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா, பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், பகத் சர்மா, சேனாபதி, அம்பத்தி ராயுடு ஆகிய 8 வீரர்களை சிஎஸ்கே விடுவித்துள்ளது.எ
தற்போது சிஎஸ்கே வசம் ரூ.32.1 கோடி இருப்பு உள்ளது. இதை வைத்து வரும் டிச. 19ல் துபாயில் நடைபெறும் ஏலத்தில் சிஎஸ்கே 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் பட்டியலில் கேப்டன் மகேந்திர சிங் டோனி பெயர் இல்லை. எனவே வரும் ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது உறுதியாகி உள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.