சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஓட்டல் அக்கார்ட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்து நிர்வாகிகள் அனைவரும் வெளியில் வந்து கொண்டிருந்தனர். அதேபோல் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், கே.என்.நேருவும் பேசிக்கொண்டு வந்தனர். அப்போது அமைச்சர் நேருவின் கழுத்தில் போட்டிருந்த மாலை குறித்து அமைச்சர் ஐ பெரியசாமி கேட்டார். அதற்கு நேரு இது வெள்ளி கருங்காலி மாலை என்று கூற அதைப்பற்றி கேட்ட ஐ பெரியசாமி இந்த மாலை எங்கே கிடைக்கும் என எதார்த்தமாக கேட்க உடனே அமைச்சர் நேரு தான் அணிந்து இருந்த வெள்ளி கருங்காலி மாலையை கழட்டி ஐ பெரியசாமியின் கழுத்தில் போட்டு விட்ட… அங்கிருந்த கைத்தட்டி நிர்வாகிகள் ரசித்தனர்…
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு “திடீர் பரிசு” கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு..
- by Authour
