Skip to content
Home » இவர்தான் இந்த தொகுதிக்கு என்பதில்லை.. திமுக மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..

இவர்தான் இந்த தொகுதிக்கு என்பதில்லை.. திமுக மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..

  • by Authour

திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் கட்சியின் தமிழக அமைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான  கேஎன் நேரு அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டும்; 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியம். இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவுமில்லை; யார் வெற்றி பெறுவாரோ அவரே வேட்பாளராக இருப்பார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக திமுக இளைஞரணி திகழ்கிறது. இளைஞரணி செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்துள்ளது. சேலத்தில் டிச.17ல் நடைபெறும் திமுக இளைஞரணி மாநில மாநாடு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மாநாடாக இருக்க வேண்டும்.  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன். இனி எக்காலத்திலும் மகளிரின் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *