அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென திரண்ட கருமேகங்கள் கொட்டி தீர்த்த கனமழை. வானிலை ஆராய்ச்சி மையம் வடகிழக்கு பருவமழை நீயும் என அறிவித்திருந்த நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை விவசாயிகளை ஏமாற்றியது என்றுதான் கூற வேண்டும். மழை எதிர்பார்ப்பை விட குறைவாகவே பெய்ந்துள்ளது. இதனால் விவசாயம் பெரிதும் பாதித்து உள்ளது.
இந்நிலையில் தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி நீர் ஒருபுறம் ஏமாற்றிய நிலையில் இந்த ஆண்டு பருவமழையும் ஏமாற்றுவதாக சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.