புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா வழிகாட்டுதல்படி நடைபெற்றது. போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.தங்கராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி. சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் கி.வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடத்தைப்பிடித்த மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டியினை புதிய விளையாட்டுப்போட்டிக்கான மாவட்ட இணைச்செயலாளரும், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான காசி.ராஜேந்திரன் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செயலாளர் பாலசுப்பிரமணியன், நாகப்பட்டினம் டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செயலாளர் தர்மா, உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 350 மாணவிகளும், இரண்டாம் நாள் நடைபெற்ற போட்டியில் 450 மாணவர்களும் கலந்துகொண்டனர்.