அரியலூர் மாவட்டத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் போலிசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே உள்ள வாழைப்பழ கடையில் சந்தேகப்படும்படியாக வந்து நின்ற காரை இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர் அப்போது காரில் வந்தவர் வாழைப்பழ கடையில்
இருந்தவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொடுத்துள்ளார். இதனையடுத்து சுமார் 25 ஆயிரம் மதிப்பு உள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் விசாரணையில் ஜெயங்கொண்டம் வெள்ளாழ தெருவை சேர்ந்த அப்பாஸ் (37) என்பவரையும் விற்பனைக்காக வாங்கிய கீழக்குடியிருப்பைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் ஆம்னி காரையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.