கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுழைவாயில் அருகில் பொதுமக்கள் அவர்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவரது இரு சக்கர வாகனத்திற்குள் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் வாகனத்தின் உரிமையாளரும் யார் என தெரியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த வாகனத்தின் பாகங்களை பிரித்து
பார்த்ததில் பாம்பு சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் லாவகமாக அந்தப் பாம்பை பிடித்துச் சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அடிக்கடி பாம்புகள் உட்பட விஷ ஜந்துக்கள் அடிக்கடி தென்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.