மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் 2 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியவர் கருணாநிதி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார்; திமுக அரசு கோயில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார்; அண்ணாமலை போன்றோர் இந்த கருத்துகளை சொல்லியிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்; இதுவரை ரூ.5500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக மாடல் ஆட்சியில் தான் மீட்கப்பட்டு இருக்கிறது;
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு உள்ளபடியே பக்தி என ஒன்று இருந்தால், கோயில்கள் பாதுகாப்பில் அரசின் நடவடிக்கைகளுக்காக அவர் திமுகவை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு பக்தி இல்லை. நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகிறார்.
உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றார். முன்னதாக முன்னாள் டி.ஜி.பி.யும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன நட்ராஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் குழுக்களில் முதலமைச்சர் மற்றும் அரசு குறித்து போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.