திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நவம்பர் 23ஆம் தேதியான இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. 2வது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா கண்காட்சியை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து அரங்குகள் தோறும் சென்று என்னென்ன புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்பதை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இந்த புத்தகக் கண்காட்சியில் 160-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் ஏராளமான எழுத்தாளர்களின் சிறுவர்களுக்கான புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள்,பண்பாடு சார்ந்த , மரபு சார்ந்த புத்தகங்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றள்ளன. புத்தக திருவிழா கண்காட்சி துவங்கிய முதல் நாளிலேயே புத்தக வாசிப்பாளர்கள் ஏராளமானோர் நேற்று
பார்வையிட்டனர்..பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்… புத்தகத் திருவிழாவை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பல்வேறு புத்தகங்களை தேடி தேடி படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை துறை பொறுப்பு அமைச்சராக வேண்டுகோளாக முன்வைப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்… புத்தகங்களை வாசிக்கவும், அதனை வாங்கி படிக்கும் ஆர்வமும் அனைவரிடமும் இருக்க வேண்டும், முரசொலியில் கலைஞர் எழுதிய கடிதங்கள் தான்… நாங்கள் கொள்கை பிடிப்புடன் இருக்க காரணமாக அமைந்தது. அதேபோல் மாணவர்களும் தங்கள் அறிவை மேம்படுத்தும் புத்தகங்களை விரும்பி படிக்க வேண்டும் என்றார்.விழாவில் தூரிகையில் திருச்சி மற்றும் தூய காற்றே எனும் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார், ஐஜி கார்த்திகேயன், டிஐஜி.பகலவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.