பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக எரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் விசுவநாதன் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றன,
அதன் அடிப்படையில் 23/11/2023 தேதியான இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருகை தந்த பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள படைபுழுவினால் தாக்கப் பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் நாற்பதாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.