திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டார். அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த சிறுவனை மீட்டு குழந்தைகள் நலக்குழு வசம் ஒப்படைத்தனர் .பின்னர் அவனை ஒரு காரில் கரூர் பைபாஸ் சாலை வி.என் நகரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது காப்பகத்தின் நுழைவாயில் பகுதியில் காரில் இருந்து இறங்கி அந்த சிறுவன் தப்பி ஓடி விட்டார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தோம் அவனை காணக் கிடைக்கவில்லை. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தப்பி ஓடிய சிறுவன் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காரைக்குறிச்சி காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் ஜேம்ஸ் (வயது 14 )என்பது தெரியவந்தது.உடனே இது குறித்து குழந்தைகள் நல குழுவின் மேலாளர் மீனா கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.