கோவையில் நேற்று நிருபர்களிடம் தமிழக பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. , அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நடந்தாலே மயக்கம் வருவதால் அவர் சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படுகிறார். மன அழுத்தம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அமைச்சருக்கு 2 கால்களும் அடிக்கடி மரத்துப் போவதால், தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.