திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டி ஐ ஜி பகலவன் நேரில் பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி ஐ ஜி பகலவன் கூறுகையில்..,
திருச்சி ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொறுத்தவரை, அவரை தேடி சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். கை துப்பாக்கி,
மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுத வைத்து தாக்கம் முற்பட்டார். இதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயமடைந்துள்ளார். காயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் நலமுடன் உள்ளார். திருச்சி மாவட்டத்தில் ரவுடிசத்திற்கு இடம் கிடையாது. இது போன்ற எண்ணம் உடையவர்களை ஒருபோதும் காவல்துறை அனுமதிக்காது. நடவடிக்கை கடுமையாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு நாட்களாக ரவுடிகளை ஸ்பெஷல் பிரான்ச் போலீசார் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் சனமங்கலம் பாரஸ்ட் ஏரியாவில் துப்பாக்கியுடன் பணம் பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்கு பன்றி மேய்க்கும் தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சமூக விரோதிகள் அராஜகம் செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொழுது, ஜெகன் என்ற இந்த நபர் அங்கு இருந்தார். தேடப்பட்ட குற்றவாளி என்பதால் அவரை பிடிக்க முற்பட்டனர். அப்பொழுது துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, அருவா உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்டார் இதனால் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஜெகன் மீது நான்கு கொலை வழக்கு 6 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 50 வழக்கில் ஈடுபட்டுள்ளார். இதில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரவுடீசத்திற்கு வேலை இல்லை என கூறினார்.