மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். வெண்ணிலாவின் அப்பா சின்னசாமி தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குதிரைவாலி பயிரிட்டுள்ளார். அறுவடைக்காக கதிரடிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அறுவடை நடைபெற்றது. நேற்று மாலை 4.30 மணியளவில் அறுவடை இயந்திரத்தில் பயிர்கள் பிரிக்கும் பகுதியில் வெண்ணிலா பணியில் ஈடுபட்ட போது திடீரென அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கிகொண்டது.
