நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு பால்பண்ணைச்சேரி நாகூர் பகுதியை சேர்ந்த மூன்று மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் சகோதரர்கள் ரிணவ் லிங்கேஷ் -சாய் கிரிஷ் எங்க தெருவில மழை பெய்யுது லீவ் விடுங்க சார் ……என்று மழலை சிரிப்புடன் கோரிக்கை வைத்தனர். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.