தமிழக நல கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ், சிறுபான்மை அணி செயலாளர் ஏசுதாஸ் ஆகியோர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாக்குடி மகிழம்பாடி கிராமத்தில் புனித சவேரியார் பங்கு ஆலயம் உள்ளது. கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த தேவாலயத்தில் சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் மதுரை உயர்நீதிமன்ற கிளை சாதிய தீண்டாமை பாகுபாடு இல்லாத வகையில் தேர்த்திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது இருந்தபோதிலும் மறை மாவட்ட ஆயர் திருவிழாவை நடத்தாமல் தள்ளிப் போட்டு வருகிறார்.
ஆகவே நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து தேர் திருவிழாவை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது ஸ்டீபன் தாஸ், பிரிட்டோ, ஜோஸ்வா மற்றும் பலர் உடன் இருந்தனர்