Skip to content
Home » பாலியல் தொல்லை கொடுத்த டாப் ஹீரோ…. நடிகர் விசித்ரா கண்ணீர் கதை…

பாலியல் தொல்லை கொடுத்த டாப் ஹீரோ…. நடிகர் விசித்ரா கண்ணீர் கதை…

  • by Authour

முன்னணி தெலுங்கு ஹீரோ ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஒருவனை சுட்டி காட்டியதற்காக ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் தன்னை  கன்னத்தில் அறைந்து விட்டார் எனவும் கண்ணீர் மல்க விசித்ரா பிக் பாஸ் இல்லத்தில் பேசியுள்ளார்.

பிக் பாஸ் இல்லத்தில் இந்த வாரம் பூகம்பம் என்ற தலைப்பில்  எதிர்பாராத ட்விஸ்ட்களைக் கொடுத்து வருகிறார் பிக் பாஸ். அந்த வகையில் இந்த வாரம் மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைய இருக்கிறார்கள். இதற்கு முன்பு போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் பூகம்பம் டாஸ்க் என்ற விஷயத்தைக் கொடுத்திருக்கிறார். அதாவது போட்டியாளர்கள் தங்கள் வாழ்வை அசைத்துப் பார்த்த விஷயம் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நடிகை விசித்ரா, தெலுங்கில் ஒரு படத்தில் நடித்தபோது, ஹீரோவால் நடந்த பாலியல் தொல்லைக் குறித்துப் பேசியுள்ளார்.

இது குறித்து விசித்ரா பேசுகையில், ‘அந்த தெலுங்கு படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் மலம்புழாவில்  நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்குவந்த ஹீரோ ‘இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?’ எனக் கேட்டுவிட்டு இரவில் தன்னுடைய ரூமுக்கு வா என சொல்லிவிட்டு போய்விட்டார். நான் அதிர்ச்சி ஆகி விட்டேன். என் பெயரைக் கூட அவர் கேட்கவில்லை.

இதையடுத்து, ஒருநாள் காட்டுப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஒரு கலவர காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஆக்‌ஷன் சொன்னதும் என்னை ஒருவர் தவறாக தொட்டதை உணர்ந்தேன். இதையடுத்து அந்த ஷாட் ரீ-டேக் எடுத்தனர். அப்போது மீண்டும் அதேபோல தடவினார். பின்னர் மூன்றாவது டேக் எடுத்தபோது அந்த நபரை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்.

உடனே அவனது கையை பிடித்து இழுத்து சென்று ஸ்டன்ட் மாஸ்டரிடம் கொண்டு வந்து நிறுத்தினேன். அவர் அந்த நபரை தட்டிக் கேட்காமல் எனது கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். நான் அப்படியே ஷாக் ஆகிப்போய் நின்றேன். அவர் அடித்ததை அங்கிருந்த யாரும் தட்டிக்கேட்கவில்லை. அந்த சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. பின்னர் நடிகர் சங்கத்திடம் இதுகுறித்து புகார் அளித்தேன். அப்போது அந்த நடிகர் சங்க தலைவர் இதையெல்லாம் மறந்துவிட்டு நடிக்க சொன்னார்.

பின்னர் போலீஸிடம் சென்றேன். இந்த சம்பவத்தில் எனக்கு யாருமே ஆதரவு அளிக்காததால் தான் நான் சினிமாவை விட்டே விலக முடிவு செய்தேன். அந்த ரணத்தில் இருந்து தன்னால் மீள முடியாததால் தான் 20 ஆண்டுகளாக சினிமாவில் கம்பேக் கொடுக்கவில்லை. ’இப்படியான மரியாதை தரும் இடத்தில்தான் நீ வேலை பார்க்கிறாயா?’ என்று அந்த ஓட்டல் மேனேஜர் என்னைக் கேட்டார். பின்னாளில் அவர்தான் என்னைத் திருமணம் செய்து கொண்டு எனக்கு மரியாதையான வாழ்க்கையைக் கொடுத்தார் என்றும் கண்ணீர் மல்க கூறினார் விசித்ரா.

அவர் சொன்ன இந்த சம்பவம் ‘பலேவடிவி பாசு’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்தபோது நடந்ததாகவும், அப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்பவர் தான் விசித்ராவை கன்னத்தில் அறைந்ததாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அப்படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *