Skip to content
Home » தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

தஞ்சை பெரிய கோவிலில் இலவச காலணி பாதுகாப்பிடம் அமைக்க வேண்டும்…. தீர்மானம்..

தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் திருக்கோயில்கள் வளர்ச்சி கூட்டமைப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தலைவர் வழக்கறிஞர் முருகேசன் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் வழக்கறிஞர் ஜீவகுமார், முன்னாள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மன்னன் உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தஞ்சை பெரிய கோவிலில் செக்யூரிட்டி கொண்டு சூப்பர்வைசர் பணி நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக சூப்பர்வைசர் பணியை மேற்கொள்ள உடனடியாக அலுவலர் பணியமர்த்த வேண்டும். அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் பணியாளர்களை டெண்டர் எடுக்கும் முறையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு விட வேண்டும்.

பிரகதீஸ்வரர் ,பெரியநாயகி அம்மன் மற்றும் மற்ற சன்னதியில் உள்ள சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்வதற்கு வசதியாக அர்ச்சனை கடைகளை ஏற்படுத்த வேண்டும். பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் சுவாமி படங்களின் போட்டோவை விற்பனை செய்ய வசதி செய்ய வேண்டும். பெரிய கோயிலில் ஏலம் விடாமல் ஆயிரக்கணக்கான புடவைகள் சேமிக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக ஏலம் விட்டு கோவிலுக்கு வருமானம் ஏற்படுத்த வேண்டும்.

இலவசமாக காலணி பாதுகாப்பிடம் செய்து தர வேண்டும். பாதுகாப்புக்காக நிறுவப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும். முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் தரிசிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத் தலைவர் புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள் பொறியாளர் ஆறுமுகம் கணேசன், பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் நவநீதம், முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் மருத்துவர் பாலகுமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!