அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (43) கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இவரது மகன் சந்தோஷ் (15) ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பி வீட்டில் இருந்தவர் இரவு 9 மணியிலிருந்து காணவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள். உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் சந்தோஷின் தந்தை மணிகண்டன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.