புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எஸ்.பி. அலுவலகம் காவேரி நகர் ஆரோக்கியமாதா புரம் பகுதியில் செயல்படடு வருகிறது. எஸ்.பி. அலுவலக பணிக்காக ஷிப்ட் முறைப்படி மாவட்டத்தில் பல்வேறு ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் பணியமர்த்தபட்டு வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி. அலுவலகத்தில் இரவு நேரத்தில் பணியில் இருந்த மயிலாடுதுறை டவுன் ஆண் போலீஸ் ஒருவரும் , குத்தாலம் ஸ்டேஷனில் பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவருடன் தனிஅறையில் இருந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் எஸ்.பி.மீனா நடத்திய விசாரணையின் அடிப்படையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.