தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள முல்லைப்பெரியார் அணையை கட்டியவர் லண்டனை சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குவிக். இந்த அணை கட்டுவதற்கு அரசு ஒதுக்கிய நிதியயில் அவர் அணையை கட்டினார். திடீரென வந்த வெள்ளத்தில் அணை அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அரசிடம் மீண்டும் அவர் நிதி கோரவில்லை. லண்டனில் உள்ள தனது சொத்துக்களை விற்று வந்து முல்லைப்பெரியார் அணையை மீண்டும் கட்டி முடித்தார்.
130ஆண்டுகளை கடந்த அந்த அணை மூலம் இன்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. இதனால் அந்த மாவட்ட மக்கள் பென்னி குவிக்கை இன்னும் போற்றி வழிபடுகிறார்கள். இந்த நிலையில் லண்டன் சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ லண்டனில் உள்ள பென்னி குவிக் கல்லறை அருகே நின்றவாறு ஒரு வீடியோ பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
பென்னி குவிக் கல்லறையை சீரமைப்பதாக தமிழக அரசு கூறியது. இன்னும் செய்யவில்லை. விரைவில் இதை அரசு செய்யாவிட்டால் நானே செய்வேன் என்று அதில் பதிவிட்டு உள்ளார்.