உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை தொலைக்காட்சியில் உன்னிப்பாக பார்த்து கொண்டிருந்தார். இறுதி போட்டியின் போக்கு மாற மாற வேதனையில் இருந்த ஜோதிகுமாருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பதறிபோன அவருடைய குடும்பத்தினர் உடனடியாக ஜோதி குமாரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேவும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.