தமிழ்நாடு அரசின் மசோதாக்களை வருட கணக்கில் கவர்னர் ரவி கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, கவர்னர் 3 வருடமாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் கவர்னர் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் அளித்த பதிலில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு கடந்த 13ம் தேதியே கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டார். முன்னாள் அமைச்சர் வீரமணி மீதான வழக்கு குறித்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன, எம். ஆர். விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு உத்தரவிடக்கோரும் மனு , 53 கைதிகளை விடுவிப்பது பரிசீலனையில் உள்ளது என்று பதில் அளிக்கப்பட்டது. 165 கைதிகளை விடுவிக்க கவர்னர் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டதால் இனி விஜயபாஸ்கர், ரமணா மீதான வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது.