தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடை பெற உள்ளது.
எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த தகவலை தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.