நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து பலர் மத்தியிலும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து, மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருஎன தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், ‘மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது எனக்கு மிகவும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகை திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் “சக நடிகர்களை நகைச்சுநகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும், அவர் “மனம் வருந்தி, பொது மன்னிப்பு கூறும் வரை மன்சூர் அலிகானை சங்கத்திலிருந்து ஏன் நீக்கம் செய்யக்கூடாது?” என்றும் நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது