இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை இறுதி போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இன்று நடைபெற இருக்கின்ற நிலையில் திருச்சி பொன் நகர் காமராஜபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் கிரிக்கெட் ஆர்வலர்கள் பதினைந்துக்கும்
மேற்பட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தி இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர், அவர்கள் கையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தும்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுடைய பதாகைகளை ஏந்தியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.